×

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு: குமரி காற்றாலைகளில் என்ஐஏ அதிரடி சோதனை: சொகுசு பங்களாவில் ஆய்வு

நாகர்கோவில்: கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள தங்கம் கடத்தல் வழக்கில் கைதான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், குமரியில் உள்ள காற்றாலைகளில் முதலீடு செய்திருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று காலை, கேரளாவில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் ஆரல்வாய்மொழி – குமாரபுரம் சாலையில்  3 இடங்களில் உள்ள காற்றாலைகளுக்கும், அங்குள்ள ஒரு சொகுசு பங்களாவுக்கு சென்றும் சோதனை நடத்தினர். சம்பந்தப்பட்ட காற்றாலைகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.  காற்றாலைகள் மற்றும் சொகுசு பங்களாவில் வீடியோ பதிவு மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர். இந்த காற்றாலைகள் சிவசங்கருக்கு சொந்தமானதா? அல்லது தங்ககடத்தல் சொப்னாவுக்கு சொந்தமானதா? என்ற தகவல்கள் உறுதியாக தெரியவில்லை. பினாமி பெயர்களில் இவை இயங்கி வரலாம் என கூறப்படுகிறது. என்.ஐ.ஏ. அதிகாரிகள், திடீரென குமரி வந்து காற்றாலைகளில் விசாரணை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

The post கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் பரபரப்பு: குமரி காற்றாலைகளில் என்ஐஏ அதிரடி சோதனை: சொகுசு பங்களாவில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kerala gold smuggling scandal ,NIA ,Nagercoil ,IAS ,Kerala ,Adhikari Sivashankar ,Kumari ,Kumari Windmills ,Dinakaran ,
× RELATED சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால்...